Search This Blog

Wednesday, 29 October 2008

நடிகர் சங்க உண்ணாவிரத்தில் சர்ச்சை பேச்சுக்கு தடை

தமிழ் திரையுலகம் சார்பில் ராமேஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இயக்குனர் அமீர் மற்றும் சீமான் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியாத கைது செய்யப்பட்டனர்.

இதை தொடர்ந்து நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் உண்ணாவிரத்தின் போது முன்ஜாக்கிரதையுடன் பேச முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக உண்ணாவிரத அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருக்கும் வரிகள் இவை....

உண்ணாவிரத மேடையில் பேசுபவர்கள், மத்திய, மாநில அரசுகளையோ இலங்கை அரசையோ தாக்கியோ, சட்டத்துக்கு புறம்பாகவோ, பிறர் மனம் புண்படும் வகையிலோ பேச வேண்டாம் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் கருத்துகளை பதிவு செய்வதோடு, உங்களால் இயன்ற நிவாரணத்தையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நடிகர் சங்க தலைவரின் யோசனையுடன் இந்த அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது.

No comments: