எந்த பள்ளியில் எவ்வளவு கட்டணம்: இணையதளத்தில் பார்க்கலாம்.
சொற்சு :http://www.tn.gov.in/misc/whatsnew.html
பல மாதங்களாக வலியுறுத்தி வந்த தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள், தமிழக அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
குழு நிர்ணயித்த கட்டணங்களை பெற்றோர் வரவேற்ற நிலையில், நிர்ணயித்த கட்டணம் மிகவும் குறைவு என்று பள்ளி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர்.
மொத்தம் 955 பக்கங்களில், 10 ஆயிரத்து 955 பள்ளிகளுக்கான விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. புதுக்கோட்டை, கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள 500 பள்ளிகள், மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை என குழுவிடம் தெரிவித்ததன் அடிப்படையில், அந்தப் பள்ளிகளுக்கு மட்டும் கட்டண விவரங்கள் இடம்பெறவில்லை.
மற்ற அனைத்துப் பள்ளிகளுக்கும், மாவட்ட வாரியாக, பள்ளிகள் வாரியாக, எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டுக் கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் மாவட்ட வாரி பட்டியல்.
டவுன்லோட் லிங்க்
No comments:
Post a Comment