Search This Blog

Thursday 10 December 2009

மேதை என்ற வார்த்தை இவருக்குத்தான் பொருந்தும்.







தாய்ப்பாலைப் போல சுரக்கும் ராஜாவின் இசையே தமிழனின் கண்ணீரும் புன்னகையும். இயற்கையின் மௌனத்தையும் இறைவனின் தரிசனத்தையும் இசை யாக்கிய ராகதேவன். நூற்றாண்டின் கலைஞன் இளைய ராஜாவின் பர்சனல் பக்கங்கள் இதோ... இளையராஜாவின் பிறந்த நாளும், கலைஞர் பிறந்த நாளும் ஜூன் 3. இப்போது இசைக்கு வயது 67. வீட்டில்தான் அவரது பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள். அவருக்கோ, அன்றும் மற்றுமொரு நாளே! திருவண்ணாமலைக்கான பயணங்களின் ரசிகர்... வழியே வயலோரச் சிறுவர்களைப் படம் எடுப்பார். அவர்களின் முகவரி கேட்டு, அவர்களுக்கே படங்களை அனுப்பி ஆனந்த அதிர்ச்சியும் தருவார்!

மூகாம்பிகை கோயிலுக்குப் போய் வந்த பிறகு, அசைவ உணவையும் ஆபரணங்கள் அணிவதையும் நிறுத்திவிட்டார். கழுத்தில் இரண்டு ருத்திராட்ச மாலைகள் உரிமையாகப் புரண்டுகிடக்கும்!



ராஜாவின் எளிய உணவு காலையில் இரண்டு இட்லி, மாதுளம்பழம் ஜூஸ், மதியம் கொஞ்சம் சாதம், பழம். இரவு இரண்டு சப்பாத்தி. காரம், உப்பு கிடையவே கிடையாது. சைவ ராஜா!

குளிர் உறையும் வெளிநாடுகளுக்குப் போனாலும் அதே தும்பைப்பூ வேட்டி, ஜிப்பாதான். துபாயின் பிரபல ஹோட்டலில் வேட்டி அணிந்து உள்ளே நுழையத் தடை இருந்தது. அந்தத் தடையைத் தகர்த்துத் தங்கிய ஒரே மனிதர் இவரே!



இளையராஜா எப்போது எங்கே புறப்பட்டுப் போனாலும் காரின் பின் ஸீட்டில், ஆர்மோனியப் பெட்டியும் கேமராவும் தவறாமல் இடம் பிடிக்கும்!



இளையராஜா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியமும் கார்த்திக் ராஜா, யுவன், பவதாரிணி எல்லோரையும் வீட்டுக்கு வரவழைத்துச் சேர்ந்து சாப்பிட்டு மகிழ்வார். வேடிக்கை விளையாட்டும், குழந்தைகளின் குதூகலமும், ராஜாவின் சிரிப்பும் வாசலைத் தாண்டி வெளியே கேட்கும்!
நவராத்திரிகள்தான் ராஜா வீட்டு ஸ்பெஷல். மிகச் சிறந்த சங்கீத, இசைக் கலைஞர்களைத் தன் வீட்டுக்கு வரவழைத்து, கச்சேரிகள் நடத்தி ரசிப்பார். நவராத்திரியில் இளையராஜாவின் வீடு இசையால் நிரம்பி வழியும்!


மாதம் ஒரு தடவை பௌர்ணமிக்கு திரு வண்ணாமலை செல்வார். கிரிவலம் செல்லும் போது யாரும் அதிகம் பயன்படுத்தாத உள்பாதை யைத் தேர்ந்தெடுப்பார். மௌனமே துணை!

இளையராஜா எப்போதும் வெள்ளைச் செருப்புகள்தான் அணிவார். அவ்வளவு நேர்த்தி யான செருப்புகள் கடைகளில் கிடைக்காது. அது அவருக்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படு பவை!



தன் சகோதரியின் மகள் ஜீவாவைத்தான் மணந்திருக்கிறார். எவ்வளவு கூட்டத்தில் இருந் தாலும் அவர், இளையராஜாவை 'மாமா' எனக் கூப்பிடும் குரலில் பண்ணைபுரத்துத் தமிழ் மணக்கும்!

அறக்கட்டளை ஒன்றை அமைத்து வருடா வருடம் படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங் கிக் கௌரவப்படுத்துகிறார். பரிசுகள் பெற்றவர் களில் வண்ணதாசன், ஜெயமோகனும் அடக்கம்!

முல்லையாற்றின் கரையில் லோயர் காம்ப் பில் இருக்கிற அம்மா சின்னத் தாயின் சமாதியில் அடிக்கடி போய் வழிபடுவார். எங்கும் அமைதியின் பூரணம் வழியும் அந்த இடத்தை அதிகம் விரும்பு வார். சமாதியைத் தூய்மைப்படுத்தும் பணியை அவரே மேற்கொள்கிற பாங்கில் அழகு துளிர் விடும்!
ராஜாவின் மீது ஏறி விளையாடுகிற ஒரே செல்லம் பேரன் யதீஸ்வர். கார்த்திக் ராஜாவின் மகன். யதீஸ் சொல்வதற்கு எல்லாம் ராஜாவின் தலையாட்டலும், சிரிப்பும், பணிவும் பார்க்கிற வர்களை ஆச்சர்யப்படவைக்கும்!


ஜெயகாந்தன் மிகவும் நெருங்கிய நண்பர். அவரைப் பெருமைப்படுத்துவதற்காகவே கவிஞர் ரவிசுப்ரமண்யத்தைக்கொண்டு ஓர் ஆவணப் படம் தயாரித்து இருக்கிறார்!
ராஜாவின் செல்போன் காலர் டியூன் என்ன வாக இருக்கும். ம்ஹூம்... சாதாரண ட்ரிங்... ட்ரிங்தான்!

இசை வரலாற்றில் புரட்சி செய்து, சிம்பொனி, கீர்த்தனைகள் எழுதி, இசையமைப்பாளர்களின் இசையமைப்பாளராகக் கொண்டாடப்படுகிற இளையராஜாவுக்கு மத்திய அரசு இதுவரை விருது கள் வழங்கிக் கௌரவித்தது இல்லை!


ஏ.ஆர்.ரஹ்மான், ராஜாவிடம் சில வருடங் கள் பணியாற்றியிருக்கிறார். 'என் இசை வாழ்வின் முக்கியமான காலம் அது' என நினைவுகூர்வார் ரஹ்மான்!
இல்லமே கோயில் போல இருக்கும். அம்மா சின்னத்தாயின் படம் பெரிய அளவில் இருக்கும். பூக்களை அம்மாவின் காலடியில் இட்டு, கண்கள் பனிக்க வணங்கிவிட்டுத்தான் அன்றைய நாள் தொடங்கும்!

வார நாட்களில் பிரசாத் ஸ்டுடியோவின் நுழைவாயிலில் இளையராஜாவின் கார் அமைதி யாக நுழையும்போது நம் கடிகாரத்தைக் காலை ஏழு மணி என நிச்சயமாகத் திருத்திக்கொள்ள லாம்!


இளையராஜா தன் சுயசரிதையை எழுதத் தொடங்கி 150 பக்கங்களுடன் அப்படியே நிறுத்தி வைத்திருக்கிறார். இப்படி ஓர் உரைநடை பார்த் தறியாதது எனப் படித்தவர்கள் சொல்கிறார்கள்!

ஹிந்திப் பாடகர் முகமது ரஃபியின் பாடல் களை லகுவான நேரங்களில் மெல்லிய குரல் எடுத்துப் பாடுவார் இளையராஜா. மிக நெருங் கிய நண்பர்களுக்கு மட்டும் கிடைக்கிற அபூர்வ நேரம் இது!

அண்ணன் பாவலர் வரதராஜனின் பாடல் கள் மொத்தத்தையும் தொகுத்து வருகிறார் ராஜா. தமிழ் இலக்கியத்துக்கு மிகச் சிறந்த பங்களிப் பாக இருக்கும் இந்த முயற்சி!

நாகஸ்வரம் பற்றிய ஓர் ஆவணப் படம் எடுக்க வேண் டும் என்பது இளையராஜாவின் கனவு. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்!


வெண்பாக்கள் எழுது வதில் இளையராஜா மிகவும் கை தேர்ந்தவர். அவரது வெண்பாக் களை செம்மங்குடி பெரிதாகப் பாராட்டியிருக்கிறார். செம்மங் குடியின் படுக்கையறையில் இருந்த ஒரே ஒரு புகைப்படம் ராஜாவுடையது தான்!

'இசைஞானி ','மேஸ்ட்ரோ','பத்மஸ்ரீ ' 'பத்மபூசன்', 'டாக்டர்','ராகதேவன்','இசை அரசன்' அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா....

இசைஞானி Mail id : ijaja2005@yahoo.co.in


Usure Pogudhey