Search This Blog

Monday 30 May 2011

இணையதளத்தில் தமிழ்நாடு அரசு பாட புத்தகங்கள்.



சமச்சீர் கல்வியை ரத்து செய்ததால் பழைய பாடத்திட்டம் தான் அமலுக்கு வரவிருக்கிறது. புத்தகங்கள் அச்சிட்டு வெளிவர தாமதம் ஆவதால், அவைகளை இணையதளத்தில் இருந்து எடுத்து கொள்ளும் வசதியை தமிழக அரசு செய்திருக்கிறது. கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம்.
http://www.textbooksonline.tn.nic.in



Thursday 3 March 2011

டாக்டர்'s Facebook profile- ராமதாஸ் , விஜய், ஜெயலலிதா , கருணா(நிதி)

இதைப் பார்த்து யாராவது கோவப்பட்டாலோ,இல்லை கொலைவெறி கொண்டாலோ அதற்க்கு நான் பொறுப்பல்ல.காரணம்,பார்த்தேன்....ரசித்தேன் ¯\_(ツ)_/¯

படம் தெளிவின்மையாக இருந்தால் படத்தைக் கிளிக் செய்து பார்க்கவும்.
-:¦:-__-:¦:-__-:¦:-__-:¦:-__-:¦:-__-:¦:- -:¦:-__-:¦:-__-:¦:-__-:¦:-__-:¦:-__-:¦:-__-:¦:-__-:¦:-__-:¦:-




‎(•̮̮̃•̃)۶ ٩(-̮̮̃-̃)۶ ٩(●̮̮̃•̃)۶ ٩(͡๏̯͡๏)۶ ٩(-̮̮̃•̃)۶

Tuesday 1 March 2011

மைன்ட் வாய்ஸ் :) நகைசுவைக்காக மட்டும்







Wednesday 16 February 2011

உலகம் மெரளும் ஒரு தலைக் காதல் !






Saturday 29 January 2011

இணைந்திருங்கள். இனம் காப்போம்.


அன்புள்ள முதல்வருக்கு(?!),
ஒரு அப்பாவி மீனவனின் கடிதம், நீங்கள் நலமா என்று கேட்க்கப்போவதில்லை, உங்கள் நலம் மற்றும் உங்கள் குடும்ப நலம் ஊரே அறியும்! நாங்கள் நலம் என்றும் சொல்லப்போவதில்லை, எங்கள் நாதியற்ற வாழ்க்கையை நாடே அறியும், உங்களுக்கும் உங்கள் அன்னையையும் தவிர்த்து! நீங்கள் எழுதும் கடிதங்களுக்கு மத்திய அரசில் என்ன மரியாதை கொடுப்பார்களோ அந்த மரியாதையை இந்த கடிதத்திற்கு கொடுக்க வேண்டாம்! அது உங்கள் பதவியை காப்பாற்ற எழுதுவது! இது எங்கள் உயிரை காப்பாற்ற எழுதுகிறோம்! தேர்தல் நேரம் வேறு, உங்களுக்கு கூட்டணி பற்றி பேசவும், தொகுதி பங்கீடு பற்றி பேசவுமே நேரம் சரியாக இருக்கும், எங்கள் உயிரை பற்றி உங்களுக்கு கவலைப்பட நேரமிருக்காது! இருந்தாலும்.....எங்களில் ஒருவன் இறந்தால் உங்கள் ஓட்டு கணக்கில் ஒன்று குறையும், அதற்க்காகவாது கவலைப்படுவீர்கள் என்று நினைக்கிறேன்!







ஐநூறு மீனவர்களை சுட்டதர்க்குகூட டெல்லி செல்லாத நீங்கள் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு டெல்லி செல்லப்போவதாக கேள்விப்பட்டேன்! நல்லது....அப்படியே உங்கள் அன்னையிடம் எங்களைப்பற்றியும் சொல்லுங்கள்! பிரான்சில் சிங்கின் தலைப்பாகைக்கு வரிந்து கட்டி பேசிய மன்மோகனிடம் சொல்லுங்கள், இங்கு தமிழ் மீனவனின் தலையே போய்க்கொண்டிருக்கிறது என்று! இலங்கைத்தமிழன் சாகும்போதுதான் இந்திய இறையாண்மை தடுத்தது! இப்பொழுது இந்திய மீனவனே செத்துக்கொண்டிருக்கும் பொழுது எந்த இறையாண்மை தடுக்கிறது என்று கேட்டுச்சொல்லவும்,


ஆஸ்திரேலியாவில் ஒரு வட இந்தியன் தாக்கப்பட்டால் கொதித்து எழும் இந்திய பத்திரிக்கைகள் இத்தனை மீனவன் இறந்த பின்னும் மௌனம் காப்பது நாங்கள் இந்தியர் இல்லை என்பதாக அர்த்தமா?! அதுசரி....நாங்கள் தேர்ந்தெடுத்த உங்களுக்கே எங்களைப்பற்றி அக்கறை இல்லை..அவர்களிடம் எப்படி எதிர்பார்க்கமுடியும்?! ரெம்ப நாளா உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்...எங்களுக்கென்று ஒரு அமைச்சரை நியமித்தேர்களே...அவர் யார் என்ன பெயர் என்று சொல்லமுடியுமா? இத்தனை நடந்த பிறகும் ஒரு கண்டன அறிக்கை கூட விடாமல் உங்கள் பின்னால் பதுங்கிக்கொள்ளும் அவரை பார்க்கவேண்டும்!


எங்கள் உயிரின் மதிப்பு உங்களுக்கு ஐந்து லட்ச்சத்தோடு முடிந்துவிடுகிறது! என்ன செய்வது உயிரோடு இருந்தால் உங்கள் ஓட்டு கணக்கு அதைவிட கம்மிதான்! இதை மனதில் வைத்தாவது நீங்கள் ஏதாவது செய்தாக வேண்டும்! தமிழின தலைவர் என்று சொல்லியே ஒரு பக்கம் தமிழினத்தையே ஒழித்தாகிவிட்டது! அந்த வெறி பிடித்த வேட்டை நாய்களுக்கு இன்னும் ரத்த வெறி அடங்காமல் இப்பொழுது நாடு தாண்டி நாட்டாமை செய்கின்றது! இங்கு உள்ள தமிழர்களையும் அழித்து விட்டால் உங்கள் வாரிசுகளை எங்கு கொண்டு போய் முதலமைச்சர் ஆக்குவது?! உங்களுக்கு கவலைப்படவேண்டிய விசயந்தான்....யோசிங்க ஐயா! கனிமொழியின் மகன் தலைவராகும் காலத்திலும் கூட வோட்டு போட நாங்கள் வேண்டும்! இந்த படித்தவர்களை நம்ப்பாதீர்கள்! நீங்கள் செய்த ஊழலும், அடித்த கொள்ளையும் தெரிந்துவிட்டால் வோட்டை மாற்றிப்போடும் அபாயம் உண்டு! ஆனால் நாங்கள் மட்டும்தான் ஒரு ரூபாய் அரிசிக்கும் இலவச டிவிக்கும் எப்போதும் மாறாமல் இருப்போம்!


முடிவாக ஒன்று ஐயா....இது முடியாத தொடர்கதை என்று எங்களுக்கும் தெரியும்! அதானால் அவர்களிடம் கேட்டு சொல்லுங்கள், யார் சாவது என்று தெரியாமலே கடலுக்கு செல்வதை விட...வாரம் ஒருவரை நாங்களே தேர்ந்தெடுத்து அனுப்பிகிறோம்! அவர்கள் வெறி அடங்கும் வரை சுட்டுக்கொல்லட்டும்! மகாபாரத்தில் வருமே அதுபோல! எங்களுக்கும் ஒரு பீமன் வராமலா போவான்?!! அதுவரை உங்கள் கடிதங்கள் தொடரட்டும்! அதுவரை உங்கள் வசனத்தை நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்! "வாழ்வது நானாக இருக்க, சாவது தமிழனாக இருக்கட்டும்!"
இப்படிக்கு,
உங்கள் ஓட்டு வங்கியில் ஒரு அப்பாவி மீனவன்





ஏதோ என்னால் முடிந்தது இதுமட்டும்தான்! ஆனால் மனம் முழுவதும் வலிகளுடன் ! இதற்க்கு தீர்வு நம்மால் முடியாது! ஆனால் தீர்வு காண முடிந்த அளவு வலியுறுத்துவோம்!


இந்த பதிவை யார் வேண்டுமானாலும் காப்பி செய்து உங்கள் பிளாக்கில் பதிவிடுங்கள், அதிக வாசகர்களை சென்றடைந்தால் சரி!
நரி அரசாள, நாய் வேட்டையாட, ஓநாய்கள் கூத்தாட - மனிதர்கள் நாம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறோம்

இணைந்திருங்கள். இனம் காப்போம். மத்திய மாநில அரசின் ஆட்சியாளர்களுக்கு தமிழன் சாவதை பற்றி கவலை இல்லை என்பதை தெளிவாக அறிந்துகொண்டபிறகு, நாம், மக்கள், நமது எதிர்ப்பை எல்லா வகையிலும் பதிவு செய்தால் மட்டுமே, அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். ஒரு தீர்வை நோக்கி இந்த பிரச்சினையை நகர்த்த முடியும்.

அப்படி செயல்பட்டால் மட்டுமே, ஜனநாயக முறையில், அகிம்சை வழியில், மத்திய மாநில அரசுகளின் தற்போதைய 'கண்டும்காணா' கொள்கைகளில் சரியான மாற்றம் கொண்டுவரமுடியும்...இன்றைக்கு எனக்கு 'இந்திய' என்ற வார்த்தை சற்றே அன்னியமாக படுகிறது. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபிறகும், இனிமே சுடமாட்டோம் என்று புளுகும் இந்த அறிவு ஜீவிகள், இதுவரை ஒரு பேச்சுக்கு கூட இது தவறு, இந்த செயலுக்காக வருந்துகிறோம் என்று சொல்லவில்லை.


பெட்டிசன் ஆன்லைனில உங்களை கையொப்பங்களைப் பதிவு செய்யுங்கள் http://www.petitiononline.com/TNfisher/
கீழே இரண்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன:-
http://164.100.47.132/LssNew/members/membershomepage.aspx
மக்களவை உறுப்பினர்கள் விவரம்
http://164.100.47.5/Newmembers/memberlist.aspx
மாநிலங்களவை உறுப்பினர் விபரம்
அப்பெயர்களை சொடிக்கி ஒவ்வொருவரின் மின்னஞ்சல் முகவரிகளைப் பெறலாம். யாருக்கு எப்படி அனுப்பினால் மீனவர்கள் அப்படி பாதிக்கப்படமாட்டர்கள் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு முறைப்படி ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிடுங்கள்.

இந்திய ஜனாதிபதிக்கு மீனவர் பிரச்சினை பற்றி தெரிவியுங்கள்

http://helpline.rb.nic.in/HOME.aspx?useraction=gX0sAV6uMMT9ojNe
ஜனாதிபதியை இந்த மெயில் மூலம் நேரடி தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் குறையை தீர்க்க ஜனாதிபதி அலுவலகம் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது (status) பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இதை எல்லாம் செய்ய நீங்கள் இந்தியராகவோ, அரசியல் வாதியாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இறந்தவர்களை சகோதர உணர்வுடன் பார்ப்பவர்களாக இருந்தாலே போதும்.


நன்றி