தமிழகம் முழுவதும் கடந்த ஞாயிறன்று முப்பத்தாறு இடங்களில் விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதமிருந்தனர். இந்த உண்ணாவிரதங்களுக்கான ஏற்பாட்டைச் செய்தது, இளைய தளபதி விஜய் நற்பணி இயக்கம். சென்னை சேப்பாக்கத்தில் நடந்த உண்ணாவிரதத்தில் விஜய் கலந்து கொண்டார். அதேநாளில், அதே இடத்தில் உண்ணாவிரதம் நடத்த இருந்த இந்து மக்கள் கட்சி, விஜய்க்காக அந்த இடத்தை விட்டுக் கொடுத்தது தனிக்கதை.
காலை எட்டு மணிக்கு போராட்டம் என அறிவித்திருந்தாலும், விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அங்கே வந்து சேர்ந்தபோது மணி ஒன்பது. மேடை உள்பட மற்ற ஏற்பாடுகளைப் பார்வையிட்ட எஸ்.ஏ.சி.யிடம் நாம் பேச்சுக் கொடுத்தோம். ``இந்தப் போராட்டத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. விஜயின் விருப்பத்தின் பேரில்தான் இது நடக்கிறது'' என்றார்ரசிகர்கள் இருக்கைகளில் அமராமல் எழுந்து நின்று கத்திக்கொண்டே இருந்ததால், ``நீங்கள் திரைப்பட விழாவுக்கு வரவில்லை. நம் சகோதரர்கள் வீட்டு சாவுக்கு வந்திருக்கிறீர்கள். இப்படி நடந்து கொள்ளக் கூடாது'' என்று மைக்கில் எஸ்.ஏ.சி. திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் யாராவது கேட்டால்தானே?
காலை 10.20-க்கு விஜயின் தாயாரும் பாடகியுமான ஷோபா சந்திரசேகர் வர, 10.25 மணிக்கு வந்து சேர்ந்தார் விஜய். அப்போது `நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்(!!)' என்ற பாடல் ஒலிபெருக்கியில் அலறியது. `திருச்செந்தூரில் `வில்லு' பட ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு விஜய் வந்திருப்பதாக' எஸ்.ஏ.சி. மைக்கில் சொன்னார். விஜய் வந்தபின் பேசத் தொடங்கிய ஷோபா, ``உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் சோகமும் சந்தோஷமாக மாறும் காலம் வந்துவிட்டது'' என்று முடித்துக் கொண்டார்.
ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகப் பேச அரசியல் பிரமுகர்களோ, திரையுலகத்தினரோ வராததால் மேடை டல்லடித்தது. இதை ஈடுகட்டும் விதமாக `நீ எந்த ஊரு நான் எந்த ஊரு', `அர்ஜுனன் வில்லு, அரிச்சந்திரன் சொல்லு' போன்ற புகழ்பெற்ற விஜய் பாடல்கள் காதுகளைப் பதம் பார்த்தன. அந்தப் பாடல்களுக்கு ரசிகர்கள் எழுந்து நடனம் ஆடத் தொடங்க, உண்ணாவிரதப் பந்தலே குத்தாட்ட மேடையானது. அப்போது மேடைக்கு வந்த பேராசிரியர் சுப. வீரபாண்டியன், ``சினிமா பாடல்களுக்கு நீங்கள் இப்படி நடனம் ஆடுவதை ஊடகங்கள் ஒளிபரப்பினால் என்ன ஆகும்? நடிகர்களுக்கும் சமூகப் பொறுப்புண்டு'' என்று விழா ஏற்பாட்டாளர்கள் தலையில் குட்டு வைத்தார். :) iooooooo iooooooo...
இயக்குநர் வி.சி.குகநாதன் பேசும்போது, ``இயக்குநர்கள் சீமானும், அமீரும் தனித்தனியாகச் சொன்னால் குற்றம்; விஜய் ரசிகர்கள் அனைவரும் இணைந்து சொன்னால் அதுதான் சட்டம். விஜய் கோட்டையைப் பிடிப்பது நிஜம்'' என்று எதற்கோ அச்சாரம் போட்டுவிட்டுச் சென்றார். நடிகர் ஸ்ரீமன், ``புத்தன் பிறந்த நாட்டில் நடக்கும் யுத்தத்தை நிறுத்த புத்தனே விஜய் வடிவில் மறு அவதாரம் எடுத்திருக்கிறார்'' என்று பேசி அசத்தினார் (yena kodumasir ethulaam...........)
``தமிழகம் முழுவதும் இன்று 36 இடங்களில் விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். `சேலத்தில் ஆயிரம் சாப்பாட்டுப் பொட்டலம் வாங்கியிருந்தோம். ஆனால் இரண்டாயிரத்து ஐநூறு பேர் வந்துவிட்டார்கள்' என்று சேலம் மாவட்டத் தலைவர் என்னிடம் பேசினார்'' என அவர் சொன்னதும், மேடையில் இருந்தவர்கள் (விஜய் உள்பட) சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள். உடனே சுதாரித்துக் கொண்ட எஸ்.ஏ.சி. ``அந்தச் சாப்பாடு உண்ணாவிரதம் முடிந்ததும் வழங்குவதற்கு..'' என்று கூறி சமாளித்தார். hhaahahaahahahaaa.......... kekere pekeriyaa erupaaanuga poolaa................
கடைசியில் பேசிய விஜய், ``இலங்கையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. திரையுலகத்தினரும், அரசியல் கட்சிகளும் எத்தனையோ போராட்டங்களை நடத்திவிட்டார்கள். எனது கோரிக்கையை ஏற்று எனது ரசிகர்கள், `இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும். அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்த வேண்டும்' என்று மத்திய அரசுக்குத் தந்தி அனுப்பினார்கள். அந்த வாசகத்தை சிங்கள மொழியில் சொன்னாலாவது அவர்கள் காதில் விழுகிறதா பார்ப்போம்?'' என்றவர், ``ஸ்ரீலங்க ராஜ்ஜிய கருணாகர ஹிதயவதன; ஜெமில மரணக்கே நவதாண்டவோனே!'' என்றவர், ``நிச்சயம் அங்கு நடக்கும் போர் முடிவுக்கு வரும்'' என்று முழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். பின்பு நாம் விஜயிடம் தனியாகப் பேசியபோதும் மேடையில் பேசிய அதே கருத்தைத்தான் நம்மிடமும் சொன்னார் அவர்.
விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு முன்னோடியா இந்த உண்ணாவிரதப் போராட்டம்?
``அரசியலுக்கும், இந்த உண்ணாவிரதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழர்களுக்காக தார்மீகமாக குரல் கொடுப்பது நமது கடமை.''Extra news :)
இளைய தளபதி `வில்லு' படத்தில் ஒரு காட்சி, வைகைப் புயலும் உம்மா நாயகியும் `மை நேம் இஸ் பில்லா' பாடலுக்கு ஆடுவது போல் எடுத்தார்கள். ரேஸ் நடிகரைக் கிண்டல் அடித்து எடுக்கப்பட்ட அந்தப் பாடல் காட்சியை இளைய தளபதி மிகவும் ரசித்துப் பார்த்தாராம். `முடிந்தால் இந்தக் காட்சியை உடனடியாக காப்பி செய்து என்னிடம் தந்தால் என் குழந்தைகளிடம் காட்டி சந்தோஷப்படுத்துவேன்' என்றாராம். இப்போது அது காப்பி ஆகிக் கொண்டிருக்கிறதாம்.
2 comments:
ஓவரா ஆசைபடுறதே வேலையாபோச்சு இந்தமாதிரி நடிகர்களுக்கு!
துக்க படுற நேரத்தில் குத்தாட்டம் போட்டது உண்ணா விரததுக்கான நோக்கம் அவர்கள் மனதில் இல்லை என்றே தோன்றுகிறது.
அங்கே சினிமா உலகத்திலே விஜய் கோதாவில் குதிச்சிறுக்கார்...
இங்கே பதிவு உலகத்திலே நீங்க....
வாங்க... வாங்க.... வரவேற்கிறேன்.
Post a Comment